நாசாவின் குறுங்கோள்-ஆய்வு விண்கலமான OSIRIS-APEX ஆனது Apophis என்ற குறுங் கோளினை நோக்கியப் பயணத்தில் அதன் முதல் முக்கியச் சோதனையில் தேர்ச்சி பெற்றுள்ளது.
முதலில் OSIRIS-REx என அழைக்கப்பட்ட இந்த ஆய்வுக் கலம் ஆனது, சூரியனுக்கு மிக நெருக்கமாகச் சென்று கடக்கும் செயல்பாட்டினை வெற்றிகரமாக மேற் கொண்டு உள்ளது.
இந்த விண்கலம் ஆனது தற்போது, 2029 ஆம் ஆண்டில் அபோபிஸ் குறுங்கோளினை அடையும் முன் சூரியனை மேலும் ஐந்து முறை நெருக்கமாக கொண்டு வரும் வகையிலான ஒரு நீள்வட்ட சூரிய சுற்றுப்பாதையில் இயல்பாக இயங்கி வருகிறது.
அதன் அடுத்த அண்மை நிலை அல்லது சூரியனுக்கு மிக அருகில் வருதல் நிலையானது, 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 01 ஆம் தேதியன்று சூரியனில் இருந்து 46.5 மில்லியன் மைல் தொலைவில் நிகழ உள்ளது.
இது பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரத்தில் பாதியளவாகும்.