நாசாவின் குறுங்கோள் விண்கலமான OSIRIS-Rex ஆனது அதன் இலக்கான பெனு (Bennu) குறுங்கோளின் முதல் படங்களைப் பிடித்துள்ளது. மேலும் தனது இரண்டு வருட பயணத்திற்குப் பிறகு அதன் இலக்கை நோக்கிய இறுதிக்கட்ட அணுகுமுறையைத் தொடங்கியுள்ளது.
தோற்றங்கள், நிறமாலை விளக்கம், வளங்களைக் கண்டறிதல், பாதுகாப்பு - பாறைப்படிவு ஆய்வாளர் என்பதன் சுருக்கமே OSIRIS-Rex ஆகும்.
OSIRIS-Rexல் உள்ள பாலிகேம் (Polycam) கேமராவான OCAMS மூலம் 1 மில்லியன் கி.மீ. தொலைவிலிருந்து குறிப்பிட்ட குறுங்கோளின் முதல் காட்சிகள் படம் பிடிக்கப்பட்டன.
OSIRIS-Rex ஆனது கரிமச்சத்துள்ள குறுங்கோளான பெனு 101955ஐ ஆராய்வதற்காக 2016 செப்டம்பரில் ஏவப்பட்டது.
இது நாசாவின் முதல் குறுங்கோள் மாதிரியாக்கத் திட்டமாகும். மேற்பரப்புப் பகுப்பாய்வு, மாதிரிகளைச் சேகரித்தல் மற்றும் பூமிக்கு பாதுகாப்பாக அனுப்புதல் ஆகியவை இதன் பணிகளாகும்.
பெனு ஆனது அப்பல்லோவில் உள்ள ஒரு சிறிய மலையின் அளவையொத்த, பூமிக்கு அருகில் உள்ள கரிச்சத்துடைய குறுங்கோளாகும். இது 1999 செப்டம்பரில் LINEAR திட்டத்தின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.