TNPSC Thervupettagam
August 26 , 2018 2283 days 741 0
  • நாசாவின் குறுங்கோள் விண்கலமான OSIRIS-Rex ஆனது அதன் இலக்கான பெனு (Bennu) குறுங்கோளின் முதல் படங்களைப் பிடித்துள்ளது. மேலும் தனது இரண்டு வருட பயணத்திற்குப் பிறகு அதன் இலக்கை நோக்கிய இறுதிக்கட்ட அணுகுமுறையைத் தொடங்கியுள்ளது.
  • தோற்றங்கள், நிறமாலை விளக்கம், வளங்களைக் கண்டறிதல், பாதுகாப்பு - பாறைப்படிவு ஆய்வாளர் என்பதன் சுருக்கமே OSIRIS-Rex ஆகும்.
  • OSIRIS-Rexல் உள்ள பாலிகேம் (Polycam) கேமராவான OCAMS மூலம் 1 மில்லியன் கி.மீ. தொலைவிலிருந்து குறிப்பிட்ட குறுங்கோளின் முதல் காட்சிகள் படம் பிடிக்கப்பட்டன.
  • OSIRIS-Rex ஆனது கரிமச்சத்துள்ள குறுங்கோளான பெனு 101955ஐ ஆராய்வதற்காக 2016 செப்டம்பரில் ஏவப்பட்டது.
  • இது நாசாவின் முதல் குறுங்கோள் மாதிரியாக்கத் திட்டமாகும். மேற்பரப்புப் பகுப்பாய்வு, மாதிரிகளைச் சேகரித்தல் மற்றும் பூமிக்கு பாதுகாப்பாக அனுப்புதல் ஆகியவை இதன் பணிகளாகும்.
  • பெனு ஆனது அப்பல்லோவில் உள்ள ஒரு சிறிய மலையின் அளவையொத்த, பூமிக்கு அருகில் உள்ள கரிச்சத்துடைய குறுங்கோளாகும். இது 1999 செப்டம்பரில் LINEAR திட்டத்தின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்