TNPSC Thervupettagam

P-75I மற்றும் காற்று சாரா உந்துவிசைத் தொழில்நுட்பம்

May 6 , 2022 939 days 540 0
  • பிரான்சு நாட்டின் கடற்படைக் குழுவானது, இந்தியக் கடற்படையின் P-75I நீர்மூழ்கிக் கப்பல் கட்டமைப்புத் திட்டத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.
  •  P-75I (திட்டம் 75 இந்தியா) ரக நீர்மூழ்கிக் கப்பல்கள் டீசல்-மின்சார நீர்மூழ்கிக் கப்பல்கள் பிரிவில் கட்டத் திட்டமிடப்பட்ட  ஒரு கப்பலாகும்.
  • P-75I திட்டம் ஆனது உத்திசார் கூட்டாண்மை மாதிரியின் கீழ் மேற்கொள்ளப்படும் இந்தியாவின் முதல் திட்டமாகும்.
  • வளிமண்டல ஆக்சிஜனைப் பயன்படுத்தாமல் அணுசக்தி சாரா நீர்மூழ்கிக் கப்பலை இயக்கச் செய்யும் தொழில்நுட்பமே காற்று சாரா உந்துவிசைத் தொழில்நுட்பம் ஆகும்.

பின்னணி

  • 1999 ஆம் ஆண்டில், பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவானது, 2030 ஆம் ஆண்டிற்குள் 24 நீர்மூழ்கிக் கப்பல்களை உள்நாட்டிலேயே உருவாக்கிப் படையில் இணைப்பதற்கான ஒரு 30 ஆண்டு காலத்  திட்டத்தினைத் தொடங்க இந்தியக் கடற் படைக்கு ஒப்புதல் அளித்தது.
  • முதல் கட்டத்தில், P-75 மற்றும் P-75I என்ற இரண்டு கப்பல் கட்டமைப்புத் திட்டங்கள் உருவாக்கப் பட்டன.
  • ஒவ்வொரு திட்டத்தின் கீழும் ஆறு நீர்மூழ்கிக் கப்பல்கள் உருவாக்கப்படும்.
  • P-75 திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட முதல் நீர்மூழ்கிக் கப்பலானது 2017 ஆம் ஆண்டில் படையில் இணைக்கப்பட்டது.
  • இத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இறுதி நீர்மூழ்கிக் கப்பலான வாக்சீர் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் படையில் இணைக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்