TNPSC Thervupettagam

P.V.சிந்து – துணை ஆட்சியர்

April 5 , 2018 2458 days 790 0
  • ஒலிம்பிக் பதக்க வீராங்கனையான P.V. சிந்து ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் துணை ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளார்.
  • 2017 ஆம் ஆண்டு மே மாதம் ஆந்திரப் பிரதேச மாநில சட்ட மன்றமானது P.V. சிந்துவை மாநில அரசின் குரூப் I அதிகாரியாக நியமிக்க மாநில பொது பணிச் சேவை சட்டத்தை (State Public Services Act) திருத்த மசோதா ஒன்றை நிறைவேற்றியது.
  • 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில்    பாட்மிண்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற P.V. சிந்துவை கவுரவிப்பதற்காக ஆந்திரப் பிரதேச அரசானது   மாநில அரசில் குரூப் I பதவியை   அவருக்கு அறிவித்தது.
  • அரசுப் பணியில் எத்தகு நியமனங்களையும் அரசு பொது பணித் தேர்வாணையம் மற்றும் தேர்ந்தெடுப்பு குழு மூலம் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.
  • இத்தகு வழிமுறை அல்லாது வேறுபட்ட வழியில் P.V. சிந்துவை நியமிக்க வேண்டியிருந்ததனால் ஆந்திரப் பிரதேச அரசானது 1994 ஆம்  ஆண்டின் ஆந்திரப் பிரதேசம் (பொதுப் பணிகளுக்கான நியமனங்களின்   ஒழுங்கு முறைகள், ஊதிய அமைப்பு மற்றும்  பணியாளர் அமைப்பு)  {(Regulation of Appointments to Public Services and   Staff Pattern and Pay Structure) Act, 1994} சட்டத்தில்  திருத்தத்தை கொண்டு வர வேண்டியதாகி விட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்