TNPSC Thervupettagam

P. V. நரசிம்மராவ் வழக்கு – 1998

September 23 , 2023 303 days 263 0
  • உச்ச நீதிமன்றமானது வாக்களிப்பிற்குப் பணப் பட்டுவாடா செய்யப்படும் வழக்குகளில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு விலக்கு அளிக்கும் 1998 ஆம் ஆண்டு தீர்ப்பினை மறுபரிசீலனை செய்வதற்காக ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்குச் சமீபத்தில் பரிந்துரைத்தது.
  • அந்தத் தீர்ப்பானது சட்டமியற்றும் உறுப்பினர்களுக்கு அவர்களின் பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான லஞ்சக் குற்றச்சாட்டுகளுக்கான குற்றவியல் வழக்குகளிலிருந்து விலக்கு அளித்தது.
  • 1993 JMM லஞ்ச வழக்கில் இருந்து உருவான P. V. நரசிம்ம ராவ் வழக்கில், சட்டமியற்றும் உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர் தேர்தலில் வாக்களிப்பினை ஊக்குவிக்கச் செய்வதற்காக லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.
  • உச்ச நீதிமன்றம் ஆனது அந்த வழக்கில் 105(2)வது சட்டப் பிரிவின் கீழ் சட்டமியற்றும் உறுப்பினர்களுக்கு விலக்கு அளித்துள்ளது.
  • 2012 ஆம் ஆண்டு, மாநிலங்களவைத் தேர்தலில் ஒரு சுயேச்சை வேட்பாளருக்கு வாக்கு அளிப்பதற்கு லஞ்சம் பெற்றதாக சீதா சோரன் மீது குற்றம் சாட்டப்பட்டது.
  • அவர் இதிலிருந்து விலக்கு பெறுவதற்காக 194(2)வது சட்டப் பிரிவினைப் பயன்படுத்த முன்மொழிந்தார், ஆனால் உயர் நீதிமன்றம் அவரது கோரிக்கையை நிராகரித்து, பின் மேற்கொண்டு சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்