ஒலிம்பிக் பதக்க வீராங்கனையான P.V. சிந்து ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் துணை ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளார்.
2017 ஆம் ஆண்டு மே மாதம் ஆந்திரப் பிரதேச மாநில சட்ட மன்றமானது P.V. சிந்துவை மாநில அரசின் குரூப் I அதிகாரியாக நியமிக்க மாநில பொது பணிச் சேவை சட்டத்தை (State Public Services Act) திருத்த மசோதா ஒன்றை நிறைவேற்றியது.
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் பாட்மிண்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற P.V. சிந்துவை கவுரவிப்பதற்காக ஆந்திரப் பிரதேச அரசானது மாநில அரசில் குரூப் I பதவியை அவருக்கு அறிவித்தது.
அரசுப் பணியில் எத்தகு நியமனங்களையும் அரசு பொது பணித் தேர்வாணையம் மற்றும் தேர்ந்தெடுப்பு குழு மூலம் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.
இத்தகு வழிமுறை அல்லாது வேறுபட்ட வழியில் P.V. சிந்துவை நியமிக்க வேண்டியிருந்ததனால் ஆந்திரப் பிரதேச அரசானது 1994 ஆம் ஆண்டின் ஆந்திரப் பிரதேசம் (பொதுப் பணிகளுக்கான நியமனங்களின் ஒழுங்கு முறைகள், ஊதிய அமைப்பு மற்றும் பணியாளர் அமைப்பு) {(Regulation of Appointments to Public Services and Staff Pattern and Pay Structure) Act, 1994} சட்டத்தில் திருத்தத்தை கொண்டு வர வேண்டியதாகி விட்டது.