TNPSC Thervupettagam

PAC சங்கங்களுக்கான மாதிரி துணை விதிகள்

December 13 , 2023 221 days 148 0
  • கூட்டுறவு அமைச்சகம் ஆனது, முதன்மை வேளாண் கடன் சங்கங்களை (PAC) புத்துயிர் பெறச் செய்யும் நோக்கில் மாதிரி துணை விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்த மாதிரி விதிகள், அடிமட்ட நிலையில் உள்ள முதன்மை வேளாண் கடன் சங்கங்களின் செயல்பாடுகள் மற்றும் நடவடிக்கைகளை நிர்வகிப்பதற்கான வழிகாட்டுதல்கள் அல்லது ஒழுங்குமுறைகளின் தொகுப்பாகும்.
  • மாதிரி விதிகளை ஏற்றுக் கொள்வதன் மூலம், முதன்மை வேளாண் கடன் சங்கங்கள் பல்சேவை வழங்கீட்டு மையங்களாக செயல்பட முடிவதோடு, அவற்றின் செயல்பாட்டுத் திறன், வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புணர்வை மேம்படுத்த செய்யவும், கிராமப்புறங்களில் வேளாண் கடன்கள் மற்றும் பல்வேறு கடன் சாரா சேவைகளை வழங்க முடியும்.
  • PACS என்பது மூன்று அடுக்கு கூட்டுறவு கடன் கட்டமைப்பில் கடைநிலை அமைப்பாக செயல்படுகின்ற கிராம அளவிலான கூட்டுறவு கடன் சங்கங்கள் ஆகும்.
  • நாட்டில் 1.02 லட்சம் முதன்மை வேளாண் கடன் சங்கங்கள் உள்ளன.
  • மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 20,897 முதன்மை வேளாண் கடன் சங்கங்கள் உள்ள நிலையில் அதில் 11,326 PACS நஷ்டத்தில் இயங்குகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்