ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ஏவுகலம் மூலம் நாசாவின் நுண்ம உயிரிகள், தூசுப்படலம், மேகம், பெருங்கடல் சூழலமைப்பு (PACE) ஆய்வுக் கலம் ஆனது அடுத்த அடுத்த நிலை சுற்றுப்பாதையில் நுழைந்தது.
பூமியின் பெருங்கடல்கள், காற்றின் தரம் மற்றும் பருவநிலை மாற்றம் பற்றிய ஆய்வில் இந்த ஆய்வுத் திட்டம் ஒரு படி முன்னேறியுள்ளது.
நமது புவி கிரகத்தின் சுற்றுச்சூழல் அமைப்புகளின் பெரும் முக்கிய நுணுக்கங்களைக் கண்காணிக்கப்பதற்காக வடிவமைக்கப்பட்ட மேம்பட்ட கருவிகள் இந்தக் கலத்தில் பொருத்தப் பட்டுள்ளது.
மீன்வளத்தின் ஆரோக்கியத்தை முன்னறிவிப்பதற்கும், தீங்கு விளைவிக்கும் பாசி உருவாக்கங்களைக் கண்காணிப்பதற்கும், கடல் சார் சுற்றுச்சூழல் மாற்றங்களைக் கண்டறிவதற்கும் இந்தத் தரவு முக்கியமானது ஆகும்.