PANGEA என்ற திட்டத்திற்கு வழிகாட்டுவதற்காக தகவல்-பகிர்வு முன்னெடுப்பினைத் தொடங்குவதற்காக உலகெங்கிலும் உள்ள அறிவியலாளர்கள் கேமரூன் நகரில் கூடி உள்ளனர்.
PANGEA என்பது உயிரி-புவி-வேதியியல் மற்றும் சூழலியல் ஏற்பு குறித்த வெப்ப மண்டலப் பகுதி முழுவதுமான ஆய்வு என்பதைக் குறிக்கிறது.
கண்டங்களுக்குள்ளும் கண்டங்களுக்கு இடையிலும் வெப்ப மண்டலக் காடுகளில் உள்ள பருவநிலை மற்றும் நிலப் பயன்பாட்டு மாற்றத்தின் ஒருங்கிணைந்த விளைவுகளைப் புரிந்து கொள்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது வெப்பமண்டலப் பகுதிகளில் உள்ள காடுகளின் உருவாக்கம், அமைப்பு மற்றும் உயிர் வேதியியல் சுழற்சி ஆகியவற்றில் உள்ள ஒற்றுமைகள் மற்றும் வேறுபாடுகளை ஆய்வு செய்யும்.
இது, பருவநிலை மாற்றத் தணிப்பு மற்றும் ஏற்பு மற்றும் பல்லுயிர்ப்பெருக்க வளங் காப்பு ஆகியவற்றுக்கான சமூக நடவடிக்கைகளை ஆதரிக்கும் வகையில் முடிவுகளை மேற்கொள்வதற்கு வழிகாட்டுகிறது.