TNPSC Thervupettagam

PARAM ருத்ரா மீத்திறன் கணினி

October 2 , 2024 54 days 140 0
  • தேசிய மீத்திறன் கணினி திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மூன்று PARAM ருத்ரா மீத்திறன் கணினிகள் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன.
  • இதனுடன், வானிலை மற்றும் பருவநிலை ஆராய்ச்சிக்காக வடிவமைக்கப்பட்ட 850 கோடி ரூபாய் மதிப்பிலான உயர் செயல்திறன் கணினி (HPC) அமைப்பும் இந்த நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • மூன்று மீத்திறன் கணினிகளும் 130 கோடி ரூபாய் செலவில் கட்டமைக்கப்பட்டு புனே, டெல்லி மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களில் இயக்கப்பட்டுள்ளன.
  • அவை வானியல், மருத்துவம் மற்றும் உயர் ஆற்றல் இயற்பியல் போன்ற துறைகளில் அறிவியல் ஆராய்ச்சிக்கு உதவும்.
  • இவற்றில் மிகவும் ஆற்றல் வாய்ந்தது டெல்லியில் நிறுவப்பட்ட 3 பெட்டாஃப்ளாப் திறன் கொண்ட மீத்திறன் கணினியாகும்.
  • புனேவில் ஒரு பெட்டாஃப்ளாப் மீத்திறன் கணினி நிறுவப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் நிறுவப்பட்டுள்ள ஒரு மீத்திறன் கணினி 838 டெர்ராஃப்ளாப்ஸ் திறன் கொண்டது.
  • இந்த திறன் வரம்பில் உள்ள மற்ற மீத்திறன் கணினிகள், PARAM 8000, PARAM சித்தி AI மற்றும் PARAM Utkarsh ஆகியவையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்