46வது உலகப் பாரம்பரியக் குழுக் கூட்டத்தின் போது, கலாச்சாரத் துறை அமைச்சகம் ஆனது PARI (இந்தியாவின் பொது மக்கள் பார்வைக்கான கலை) என்ற திட்டத்தைத் தொடங்கி உள்ளது.
இந்த திட்டத்தின் நோக்கமானது பேச்சுவார்த்தை, பிரதிபலிப்பு மற்றும் உத்வேகத்தை தூண்டுவது, தேசத்தின் மாறிவரும் கலாச்சார கட்டமைப்பிற்கு பங்களிப்பதாகும்.
உலகப் பாரம்பரியக் குழுவின் 46வது அமர்வு ஆனது, இந்தியாவின் புது டெல்லியில் 2024 ஆம் ஆண்டு ஜூலை 21 முதல் 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் பல்வேறு பாரம்பரிய கலை வடிவங்கள், சுவர் ஓவியங்கள், சுவர் சித்திரங்கள், சிற்பங்கள் மற்றும் கட்டமைப்புகளை உருவாக்க நாடு முழுவதிலும் இருந்து 150க்கும் மேற்பட்ட காட்சி கலை கலைஞர்கள் ஒன்றிணைந்துள்ளனர்.