TNPSC Thervupettagam
July 15 , 2023 501 days 314 0
  • லூதியானாவில் உள்ள பல்கலைக் கழகமானது, PBW RS1 என்றப் புதிய ஒரு கோதுமை வகையை அறிமுகம் செய்துள்ளது.
  • இதில் அதிக அளவிலான அமைலோஸ் ஸ்டார்ச் (மாவுச்சத்து) உள்ளது.
  • RS என்பது resistant starch (சிறுகுடலில் செரிக்கப்படாத கார்போஹைட்ரேட்) என்பதன் பெயர் சுருக்கமாகும்.
  • இது 2 ஆம் வகை நீரிழிவு நோய் மற்றும் இருதய நோய்களின் பாதிப்பு அபாயத்தைக் குறைக்கும்.
  • இந்தக் கோதுமையில் இருந்து தயாரிக்கப்படும் சப்பாத்திகளை உட்கொள்வதால் குளுக்கோஸ் அளவுகள் உடனடியாக மற்றும் விரைவாக உயர்வதற்கு வழிவகுக்காது.
  • இதில் உள்ள அதிக அமைலோஸ் ஸ்டார்ச், உணவு சார்ந்த பல்வேறு பயன்பாடுகளில் தனித்துவமானச் செயல்பாட்டுப் பண்புகள் மற்றும் பல ஊட்டச்சத்து மதிப்புகளைக் கொண்டுள்ளது.
  • இந்த வகை மாவுச்சத்தானது இரைப்பைக் குழாயில் உள்ள ஒரு நொதி சார்ந்தச் செரிமானத்திற்கான எதிர்ப்புத் திறனைக் கொண்டுள்ளதோடு அதிக அளவில் சிறு குடலில் செரிக்கப்படாத கார்போஹைட்ரேட்டினையும் கொண்டுள்ளது.
  • அதிக அமைலோஸ் மற்றும் சிறுகுடலில் செரிக்கப்படாத கார்போஹைட்ரேட் ஆகியவை குளுக்கோஸ் இரத்த ஓட்டத்தில் மெதுவாக வெளியிடப் படுவதை உறுதி செய்கிறது.
  • இந்த மெதுவானச் செரிமான நிகழ்வானது ஒரு நல்ல உணவு நிறைவு உணர்வையும் அதிகரிக்கிறது.
  • இந்தப் புதிய வகை கோதுமையானது, மற்ற கோதுமை வகைகளில் உள்ள 66-70 சதவீதத்திற்குச் சமமான மொத்த மாவுச் சத்தினைக் கொண்டுள்ளது.
  • அதே வேளையில், PBW 550, PBW 725, HD 3086 மற்றும் PBW 766 உள்ளிட்ட பிற வகைகளில் 7.5-10 சதவிகிதம் மட்டுமே சிறுகுடலில் செரிக்கப்படாத கார்போஹைட்ரேட் என்ற உள்ளடக்கம் இருக்கும் நிலையில் இந்த வகை கோதுமையில் 30.3 சதவிகிதம் உள்ளது.
  • கள உற்பத்திச் சோதனைகளில், ஹெக்டேருக்கு 43.18 குவிண்டால் உற்பத்திப் பதிவு செய்யப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்