TNPSC Thervupettagam
August 27 , 2022 696 days 411 0
  • ஆப்பிரிக்க நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் தொற்றா நோய்களுக்கு எதிரான PEN-PLUS என்ற உத்தியை ஏற்றுக் கொண்டனர்.
  • ஆப்பிரிக்காவின் முக்கிய நகரங்களில் தொற்றா நோய்களுக்குப் பெரும்பாலும் சிகிச்சை அளிக்கப்படுகின்றன.
  • பெரும்பாலான கிராமப்புற, நகர்ப்புற, விளிம்பு நிலை மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நோயாளிகளுக்குத் தேவையான பயன்கள் அளிக்கப்பட வில்லை என்பதால் சுகாதார ஏற்றத்தாழ்வுகளை இந்நோய்கள் மேலும் மோசமாக்குகிறன.
  • இதை முறியடிக்க ஆப்பிரிக்கா PEN-PLUS என்ற புதிய ஒரு உத்தியை ஏற்றுக் கொண்டு உள்ளது.
  • PEN-PLUS உத்தி என்பது அத்தியாவசிய மருந்துகள், தொழில்நுட்பங்கள், நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை ஆகியவற்றிற்கான அணுகலை அதிகரிப்பதன் மூலம் முதல்-நிலை பரிந்துரை சார்ந்த சுகாதார மையங்களில் கடுமையான தொற்றா நோய்களை நிவர்த்தி செய்வதற்கான ஒரு பிராந்திய உத்தி ஆகும்.
  • ஏனெனில் ஆப்பிரிக்காவில் உள்ள நோயாளிகளின் சுய செலவினம் சார்ந்த செலவழிப்பிற்குப் பெரும்பாலும் தொற்றா நோய்களே காரணமாக இருப்பதால், இந்த உத்தி என்பது சிகிச்சையில் உள்ள அணுகல் இடைவெளியைக் குறைக்கும்.
  • PEN-PLUS உத்தியானது லைபீரியா, மலாவி மற்றும் ருவாண்டா ஆகிய நாடுகளில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு மேம்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்