மகாராஷ்டிராவைச் சேர்ந்த பாலிஜென்டா தொழில்நுட்ப நிறுவனத்தின் உதவியுடன் சர்வதேச விளையாட்டுக்கான ஆடைகளைத் தயாரிக்கும் அடிடாஸ் என்ற நிறுவனம் 2024 ஆம் ஆண்டில், தனது பொருட்களில் இயல் நெகிழில்களின் (இதற்கு முன் பயன்படுத்தப்படாத நெகிழிகள்) பயன்பாட்டை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கழிவுப் பொருட்களாக ஒதுக்கப்பட்ட PET பாட்டில்களிலிருந்து நூலிழையைத் தயாரிக்கும் இந்தியாவில் உள்ள இதே வகையிலான ஒரே நிறுவனம் இதுவேயாகும்.
பாலி எத்திலீன் டெரிப்தாலேட் (PET - Polyethylene Terephthalate) பாட்டில்கள் சர்வதேச மற்றும் இந்திய அளவில் நெகிழிக் கழிவுகளுக்கு மிக முக்கியப் பங்காற்றுகின்றன.
இது PET என்பதை அதன் அடிப்படைப் பொருளான எஸ்தராக மாற்றுகின்றது.
இதன் பின்பு, இது பாலியெஸ்டர் மெல்லிழை நூலைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றது.