பொது நிதியியல் நிர்வகிப்பு அமைப்பு (Public Financial Management System – PFMS) ஆனது நாள் ஒன்றுக்கு ரூ. 71,633 கோடி பர்வர்த்தனையை மேற்கொண்டு சாதனை படைத்துள்ளது.
PFMS என்பது கட்டண செலுத்துதலை செயல்படுத்தல், கண்காணித்தல், கணக்கிடுதல், சரிசெய்தல் (Reconciliation) மற்றும் அறிக்கையிடல் ஆகியவற்றிற்கான end-to-end தீர்வாகும்.
PMFS, கணக்கியல் துறையின் தலைமை கட்டுப்பாட்டாளரால் (Controller General of Accounts) செயலாக்கம் செய்யப்படுவதோடு செலவினத் துறையினால் நிர்வகிக்கப்படுகிறது. இவ்விரு துறைகளும் நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றன.
பல்வேறு அமைச்சகங்கள்/துறைகள் இந்த இணைய மேடையைப் (PFMS Platform) பயன்படுத்தி பல்வேறு நிறுவனங்கள் (Agency) மற்றும் மாநிலங்களுக்கு அளிக்கப்பட்ட நிதிகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதைக் கண்காணிக்கின்றன.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் மற்றும் மற்ற பிற இந்திய அரசுத் திட்டங்களின் கீழ் நேரடி பயன் பரிமாற்றத்திற்கும் (Direct Benefit Transfer – DBT) PMFS பயன்படுத்தப்படுகிறது.