TNPSC Thervupettagam
April 8 , 2018 2294 days 5461 0
  • பொது நிதியியல் நிர்வகிப்பு அமைப்பு (Public Financial Management System – PFMS) ஆனது நாள் ஒன்றுக்கு ரூ. 71,633 கோடி பர்வர்த்தனையை மேற்கொண்டு சாதனை படைத்துள்ளது.
  • PFMS என்பது கட்டண செலுத்துதலை செயல்படுத்தல், கண்காணித்தல், கணக்கிடுதல், சரிசெய்தல் (Reconciliation) மற்றும் அறிக்கையிடல் ஆகியவற்றிற்கான end-to-end தீர்வாகும்.
  • PMFS, கணக்கியல் துறையின் தலைமை கட்டுப்பாட்டாளரால் (Controller General of Accounts) செயலாக்கம் செய்யப்படுவதோடு செலவினத் துறையினால் நிர்வகிக்கப்படுகிறது. இவ்விரு துறைகளும் நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றன.
  • பல்வேறு அமைச்சகங்கள்/துறைகள் இந்த இணைய மேடையைப் (PFMS Platform) பயன்படுத்தி பல்வேறு நிறுவனங்கள் (Agency) மற்றும் மாநிலங்களுக்கு அளிக்கப்பட்ட நிதிகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதைக் கண்காணிக்கின்றன.
  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் மற்றும் மற்ற பிற இந்திய அரசுத் திட்டங்களின் கீழ் நேரடி பயன் பரிமாற்றத்திற்கும் (Direct Benefit Transfer – DBT) PMFS பயன்படுத்தப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்