தேசிய ஓய்வூதிய முறையின் (NPS) கீழ், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தினை (UPS) செயல்படுத்துவதற்கான சில விதிமுறைகளை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) வெளியிட்டுள்ளது.
PFRDA (NPS முறையின் கீழ் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் ஒரு செயலாக்கம்) விதிமுறைகள், 2025 ஆனது சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
புதிதாக அறிவிக்கப்பட்ட இந்த விதிமுறைகள் ஆனது 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.
UPS முறையில் இணைவதற்கான விருப்பத் தேர்வு ஆனது 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் தேதி முதல் மூன்று மாதங்களுக்குள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
தேர்வு செய்தவுடன், ஒருவரின் முடிவு இறுதியானதாகக் கருதப்படும் என்ற நிலையில் அதன் பிறகு அந்த முடிவினை மாற்ற முடியாது.
மத்திய அரசின் மூன்று வகையான ஊழியர்கள் இந்த UPS முறையின் கீழ் சேர தகுதி உடையவர்கள் என்று வழிகாட்டுதல்கள் குறிப்பிடுகின்றன:
2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் தேதி நிலவரப் படி பணியில் இருக்கும் மத்திய அரசு ஊழியர்கள்
ஏற்கனவே தேசிய ஓய்வூதிய முறையின் (NPS) கீழ் உள்ள ஊழியர்கள்.
2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு மத்திய அரசின் பணிகளில் சேரும் புதிய ஊழியர்கள்.