TNPSC Thervupettagam
September 16 , 2021 1075 days 633 0
  • கலிபோர்னியாவின் ஆராய்ச்சியாளர்கள் கருத்தடையின் மூலமாக கொசுக்களின் நோய்ப் பரப்பிகளைப் பாதுகாப்பான முறையில் கட்டுப்படுத்துவதற்காக CRISPR என்ற தொழில்நுட்பம் அடிப்படையிலான ஒரு முறையைக் கண்டறிந்துள்ளனர்.
  • இது PgSIT அல்லது புதிய துல்லியமான வழிகாட்டப்பட்ட பூச்சி கருத்தடைத் தொழில் நுட்பம் எனப்படுகிறது.
  • PgSIT ஆனது புதிய அளவிடக் கூடிய மரபணு கட்டுப்பாட்டுத் தொழில்நுட்பமாகும்.
  • இது ஆண் கொசுக்களின் கருவுறுதல் தன்மையுடன் இணைக்கப்பட்ட மரபணுக்களை மாற்றி மலட்டுத் தன்மையுடைய சந்ததிகளையும் ஏடிஸ் எஜிப்தி வகையில் பெண் கொசுக்களையும் உருவாக்குகிறது.
  • ஏடிஸ் எஜிப்தி என்பது டெங்கு காய்ச்சல், சிக்குன் குன்யா மற்றும் சிகா போன்ற பெருமளவிலான நோய்களைப் பரப்பக் கூடிய கொசு இனமாகும்.
  • CRISPR தொழில் நுட்பமானது அடிப்படையில் ஒரு மரபணுவின் வெளிப்பாட்டினை மாற்றுவதற்காக  () ஓர் உயிரினத்தின் மரபணுவை மாற்றுவதற்காக பயன்படுத்தப் படும் ஒரு மரபணு மாற்றத் தொழில்நுட்பமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்