ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியானது, PHANGS திட்டத்திற்கான அதன் பங்களிப்பின் ஒரு பகுதியாக, அருகில் உள்ள அனைத்துக் கிளையமைப்புகளும் தெளிவாகப் புலப்படக் கூடிய 19 சுருள் அண்டங்களை சமீபத்தில் கண்காணித்தது.
PHANGS ALMA ஆய்வானது, அருகிலுள்ள பேரண்டத்தில் நட்சத்திரத்தை உருவாக்கும் மாபெரும் அண்டங்களில் குறிப்பிடத் தக்க 90 அருகிலுள்ள அண்டங்களில் உள்ள மூலக்கூறு வாயு வட்டுகளில் கவனம் செலுத்துகிறது.
PHANGS திட்டம் என்பது உலகளவில் 150க்கும் மேற்பட்ட வானியலாளர்களால் ஆதரிக்கப் படும் ஒரு பெரிய, நீண்ட கால முன்னெடுப்பாகும்.
PHANGS என்பது அருகிலுள்ள அண்டங்களில் உள்ள உயர் கோணத் தெளிவுத்திறன் சார்ந்த இயற்பியல் என்பதைக் குறிக்கிறது.
இந்தத் திட்டமானது வாயு மற்றும் நட்சத்திர உருவாக்கத்தின் ஒரு சிறிய அளவிலான இயற்பியலின் ஊடு விளைவினைப் புரிந்து கொள்வதை ஒரு முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.