TNPSC Thervupettagam

PHDCCI மற்றும் இந்திய யோகா கூட்டமைப்பு - புரிந்துணர்வு ஒப்பந்தம்

May 3 , 2018 2401 days 717 0
  • PHD வணிக மற்றும் தொழிற்துறை குழு மற்றும் இந்திய யோகா கூட்டமைப்பு ஆகியவை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன.
  • கிருஷ்ணா பகுதியில் திறன், ஆன்மீகம் மற்றும் கலாச்சார சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக இரு நிறுவனங்களுக்கிடையே தொடர்பு மற்றும் கூட்டுறவை ஏற்படுத்துவதற்கான வசதியை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தித் தருகிறது.
  • கடவுள் கிருஷ்ணரின் பெயரிலான சுவதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் கிருஷ்ணா பகுதியை முக்கிய வசீகர சுற்றுலாத்தளமாக மேம்படுத்துவதற்காக அரசு இந்த முயற்சியை மேற்கொள்கிறது.
  • கிருஷ்ணா சுற்றின் கீழ் மேம்பாட்டிற்காக பன்னிரண்டு இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
  • அவையாவன
    • துவாரகா (குஜராத்)
    • நாத்ட்வாரா, ஜெய்ப்பூர் மற்றும் சிகர் (இராஜஸ்தான்)
    • குருஷேத்ரா (ஹரியானா)
    • மதுரா, பிருந்தாவனம், நந்தகவோன், கோகுல், பார்சானா மற்றும் கோவார்தன் (உத்திரப்பிரதேசம்).
    • புரி (ஒடிசா)

சுவதேஷ் தர்ஷன்

  • நாட்டில் கருத்தியல் அடிப்படையிலான சுற்றுலாப் பகுதிகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு சுற்றுலா அமைச்சகத்தால் சுவதேஷ் தர்ஷன் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
  • பொது நிதியளிப்பிற்காக மேற்கொள்ளப்படும் திட்டங்களின் கூறுகளுக்காக இத்திட்டத்திற்கு 100% நிதி மத்திய அரசால் அளிக்கப்படுகிறது.
  • இத்திட்டத்தின் நோக்கங்கள் மற்றும் தொலைநோக்கு பார்வை ஆகியவற்றை வழிநடத்திச் செல்வதற்காக சுற்றுலாத்துறை அமைச்சரை (பொறுப்பு) தலைவராகக் கொண்டு தேசிய வழிகாட்டும் குழு ஒன்று அமைக்கப்படும்.
  • தேசிய வழிகாட்டும் குழுவின் உறுப்பினர் செயலாளரை தலைவராகக் கொண்ட திட்ட இயக்குநரகம், மாநில/ஒன்றியப்பிரதேச அரசுகள் மற்றும் பிற நடுநிலையாளர்களுடன் கலந்தாலோசித்து திட்டங்களை அடையாளம் காண உதவி புரியும்.
  • திட்ட மேலாண்மை ஆலோசகர், திட்ட இயக்குநரகத்தால் நியமிக்கப்படும் தேசிய அளவிலான ஆலோசகர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்