TNPSC Thervupettagam

Pi – தனிநபர் பயன்பாடு சார்ந்த செயற்கை நுண்ணறிவு உரையாடு மென்பொருள்

April 4 , 2024 235 days 187 0
  • இன்ஃப்லெக்சன் AI நிறுவனமானது, பயனருக்கு ஏற்ற ஒரு சூழல் கொண்ட Pi தனிநபர் பயன்பாட்டு உதவி அமைப்பு என்ற அதன் உரையாடு மென்பொருளினை இயக்கும் ஒரு பெரிய மொழி மாதிரியின் மேம்பட்ட வடிவமான இன்ஃப்லெக்சன் 2.5 என்ற அதன் சமீபத்திய மொழி மாதிரியினை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இன்ஃப்லெக்சன் AI என்பது கலிபோர்னியாவில் அமைந்துள்ள டீப்மைன்ட் மற்றும் லிங்க்டுஇன் ஆகியவற்றின் முன்னாள் இணை நிறுவனர்களால் நிறுவப்பட்ட செயற்கை நுண்ணறிவு நுட்பம் சார்ந்த புத்தொழில் நிறுவனம் ஆகும்.
  • அவை 2023 ஆம் ஆண்டு மே மாதத்தில், Pi எனப்படும் அவற்றின் தனிப் பயன்பாட்டு செயற்கை நுண்ணறிவு உரையாடு மென்பொருளினை அறிமுகப்படுத்தின.
  • Pi என்பது ஒரு செயற்கை நுண்ணறிவு நுட்பம் சார்ந்த உரையாடு மென்பொருள் ஆகும் என்ற நிலையில் இதனைப் பயன்படுத்தி ஒருவர் ஆழ்ந்த மற்றும் மிகவும் அர்த்தமுள்ள உரையாடல்களை மேற்கொள்ள முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்