மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் 9 வருட இடைவெளிக்குப் பிறகு சர்வதேச மாணவர் மதிப்பீட்டுத் திட்டத்தில் (Programme of International Student Assessment – PISA) பங்கேற்க அலுவல்பூர்வமாக முடிவெடுத்துள்ளது.
பிரான்சின் பாரீசில் உள்ள பொருளாதார ஒத்துழைப்பு மேம்பாட்டு நிறுவனத்தால் (Organization for Economic Cooperation and Development – OECD) ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கு ஒரு முறையும் 15 வயதிற்கு மேற்பட்ட மாணவர்களுக்கான மதிப்பீட்டு நடைமுறையே PISA மதிப்பீடாகும்.