Planet on the move: Reimagining conservation அறிக்கை
July 17 , 2024 130 days 199 0
IUCN அமைப்பின் Planet on the move: Reimagining conservation at the intersection of migration, environmental change, and conflict என்ற தலைப்பிலான ஒரு பகுப்பாய்வு அறிக்கையானது வெளியிடப்பட்டுள்ளது.
2050 ஆம் ஆண்டிற்குள் பருவநிலை மாற்றம் உட்பட நிலத் தரமிழப்புகளால் 50 முதல் 700 மில்லியன் மக்கள் இடம் பெயர்வார்கள் என அறிக்கைகள் மதிப்பிடுகின்றன.
சுற்றுச்சூழல் மாற்றங்கள் மனிதர்களையும் பிற உயிரினங்களையும் இடம் பெயரச் செய்வதால் இது மோதலுக்கு வழிவகுக்கும்.
புவியில் இரு இனங்களும் ஒருமித்து வாழ்ந்தாலும், உலக நாடுகளின் இடம் பெயர்வு கொள்கைகள் பெரும்பாலும் மனிதர்கள் மற்றும் வனவிலங்குகளின் இடம் பெயர்வினை தனித்தனியாகவே கருதுகின்றன.