TNPSC Thervupettagam

PM-வித்யா லட்சுமி திட்டம்

November 12 , 2024 13 days 75 0
  • ஆண்டிற்கு சுமார் 22 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்குப் பயனளிப்பதை நோக்கமாகக் கொண்ட பிரதமர்-வித்யாலட்சுமி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்தத் திட்டம் ஆனது, “நிதிக் கட்டுப்பாடுகள் ஆனது எந்தவொரு மாணவரையும் உயர் கல்வியைத் தொடர்வதைத் தடுக்கக் கூடாது என்பதற்காகத் தகுதியுள்ள அனைத்தும் மாணவர்களுக்கு நிதியுதவி அளிக்க உள்ளது”.
  • சுமார் 7.5 லட்சம் ரூபாய் வரையிலான கடனைப் பெற முயலும் மாணவர்களுக்கு, நிலுவையில் உள்ள 75 சதவீத கடனுக்கான உத்தரவாதத்தை அரசாங்கம் வழங்கும்.
  • ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாய் வரையில் உள்ள பொருளாதாரத்தில் நலிவடைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் சுமார் 10 லட்சம் ரூபாய் வரையிலான கடனுக்கு மூன்று சதவீத வட்டி மானியம் பெற உரிமை வழங்கப்படும்.
  • அமைச்சகத்தின் உயர்கல்வித் துறையானது, PM-வித்யாலட்சுமி என்ற ஒருங்கிணைந்த இணைய தளத்தினை அமைக்க உள்ளது.
  • இதன் மூலம் மாணவர்கள் கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம் மற்றும் அனைத்து வங்கிகளிலும் வட்டி மானியம் பெறலாம்.

SAKTHIVEL M November 18, 2024

Helpfull

Reply

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்