பிரதமர் மோடி PM – CARES என்ற நிதியினை அறிவித்துள்ளார்.
PM – CARES (Prime Minister’s Citizen Assistance and Relief in Emergency Situations) என்பது அவசரக் காலங்களில் பிரதம மந்திரியின் குடிமக்கள் உதவிக்கான நிதி என்பதாகும்.
இந்த நிதியானது கோவிட் – 19 தொற்றைப் போன்ற நெருக்கடியான அல்லது அவசர கால சூழ்நிலைகளைக் கையாளுவதற்காக ஏற்படுத்தப்படுகின்றது.
இதுபற்றி
இந்த அமைப்பின் தலைவர் பிரதமர் ஆவார்.
மத்திய நிதியமைச்சர், உள்துறை அமைச்சர் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆகியோர் இந்த அமைப்பில் உள்ள பிற உறுப்பினர்கள் ஆவர்.
PM-CARES அமைப்பிற்கு நன்கொடையாக வழங்கப்படும் நிதியானது வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80 (G)ன் கீழ் வரி விலக்கு அளிக்கப் பட்டுள்ளது.
இந்த நிதியின் வங்கிக் கணக்கானது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவிடம் உள்ளது.