TNPSC Thervupettagam

PM-AASHA திட்டத்தின் மறுசீரமைப்பு

September 24 , 2024 62 days 166 0
  • பிரதான் மந்திரி அன்னதாதா ஆய் சன்ரக்சன் அபியான் (PM-AASHA) தொடர்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • விவசாயிகளுக்கு நியாயமான விலையை உறுதி செய்வதையும், நுகர்வோருக்கான அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்ற இறக்கங்களைக் கட்டுப்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த நீட்டிப்பு ஆனது 2025-26 ஆம் ஆண்டு வரையிலான 15வது நிதி ஆணையத்தின் மதிப்பாய்வு சுழற்சியின் போது 35,000 கோடி ரூபாய் நிதிச் செலவை ஏற்படுத்தும்.
  • விவசாயிகள் மற்றும் நுகர்வோருக்கு மிகவும் திறம்பட்ட முறையில் சேவை வழங்கச் செய்வதற்காக அரசாங்கம் ஆனது PM-AASHA திட்டத்தின் கீழ் விலை ஆதரவுத் திட்டம் (PSS) மற்றும் விலை நிலைப்படுத்தல் நிதி (PSF) திட்டங்களை ஒருங்கிணைத்துள்ளது.
  • இந்த ஒருங்கிணைப்பு ஆனது விவசாயிகளுக்கு அவர்களின் பயிர்களுக்கு மிகவும் இலாபகரமான விலையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதோடு மேலும், அத்தியாவசியப் பொருட்களின் சந்தை விலையை நன்கு நிலைப்படுத்தி, அவை நுகர்வோருக்கு மலிவு விலையில் கிடைக்கப் பெறுவதை இது உறுதி செய்கிறது.
  • புதுப்பிக்கப்பட்ட PM-AASHA ஆனது தற்போது பின்வரும் கூறுகளை உள்ளடக்கியது:
    • விலை ஆதரவு திட்டம் (PSS)
    • விலை நிலைப்படுத்தல் நிதி (PSF)
    • விலை நிர்ணயத்தில் உள்ள இடைவெளியை செலுத்தும் திட்டம் (PDPS)
    • சந்தை இடையீட்டுத் திட்டம் (MIS).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்