TNPSC Thervupettagam

PM CARES நிதி 2022-2023

January 1 , 2025 58 days 168 0
  • பிரதான் மந்திரியின் அவசரகாலச் சூழ்நிலைகளில் குடிமக்களுக்கான உதவி மற்றும் நிவாரணம் (PM CARES) நிதியின் தன்னார்வ பங்களிப்பு ஆனது, 2020-21 ஆம் ஆண்டில் 7,184 கோடி ரூபாயாக உயர்ந்து, 2021-22 ஆம் ஆண்டில் சுமார் 1,938 கோடி ரூபாயாகக் குறைந்தது.
  • இந்தத் தன்னார்வப் பங்களிப்புகள் ஆனது 2022-23 ஆம் ஆண்டில் 912 கோடியாகக் குறைந்தது.
  • இது 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்த நிதி நிறுவப்பட்டதிலிருந்து பதிவான மிகக் குறைவான பங்களிப்பாகும்.
  • 2020-21 ஆம் ஆண்டில் மிக அதிகபட்சமாக 495 கோடி ரூபாயாக பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டுப் பங்களிப்பு ஆனது, அடுத்த இரண்டு ஆண்டுகளில் 40 கோடி ரூபாய் மற்றும் 2.57 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.
  • 2022-23 ஆம் ஆண்டில் மொத்தச் செலவினம் சுமார் 439 கோடி ரூபாய் ஆகும், அதில் 346 கோடி ரூபாயானது "PM Cares for Children" திட்டத்திற்காகப் பயன்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்