TNPSC Thervupettagam
September 28 , 2024 17 hrs 0 min 22 0
  • மத்திய அமைச்சரவையானது, “பிரதான் மந்திரி ஜன்ஜாதிய உன்னத் கிராம் அபியான்” திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்த திட்ட ஒருங்கிணைப்பு மூலம் பழங்குடியின சமூகங்களின் சமூக-பொருளாதார நிலைமைகளை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது "காடுகளை நன்குப் பராமரிப்பதற்கும் வளங்காப்பதற்கும் வழி வகுப்பதற்காக" அனைத்து வன உரிமைகள் சட்டத்தின் (FRA) கீழும் பட்டா வைத்திருப்பவர்களுக்கும் நிலையான வேளாண் நடைமுறைகளை கொண்டு வருகிறது.
  • 2024 ஆம் ஆண்டு ஜூன் மாத நிலவரப் படி, பட்டியலிடப்பட்டப் பழங்குடியினர் (ST) மற்றும் பிற ஆதிவாசிக் குழுக்களைச் சேர்ந்த மக்கள் மற்றும் சமூகங்களுக்கு 24 லட்சத்திற்கும் அதிகமான FRA பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
  • இது நாடு முழுவதும் 1.9 கோடி ஏக்கர் வன நிலத்தை உள்ளடக்கியது.
  • இருப்பினும், FRA சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட 50.5 லட்சம் கோரிக்கைகளில் 34.83% நிராகரிக்கப்பட்டது மற்றும் 15.9% நிலுவையில் உள்ளது.
  • PMJUGA திட்டத்தின் கீழ் இலக்காகக் கொண்ட 63,000 பழங்குடியினர் பெரும்பான்மை யாக வாழும் கிராமங்கள் இந்தியா முழுவதும் 549 மாவட்டங்களில் 2,740 தொகுதிகளில் அமைந்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்