2022 ஆம் ஆண்டு ஏப்ரல்-ஜூலை மாதங்களில் 10.47 கோடியாக இருந்த PM-KISAN திட்டத்தின் பயனாளிகளின் எண்ணிக்கையானது, சுமார் 20 சதவீதம் குறைந்து 8.12 கோடியாகக் குறைந்துள்ளது.
“நிறைவு நிலை இயக்கத்தின்” கீழ் அரசாங்கம் 34 லட்சம் விவசாயிகளை மீண்டும் சேர்த்துள்ளது.
இந்த 34 லட்சம் பேரில், உத்தரப் பிரதேச மாநிலம் அதிகபட்சமாக 8.50 லட்சம் என்ற பங்கினைக் கொண்டுள்ளது.
அதைத் தொடர்ந்து ராஜஸ்தான் 2.39 லட்சம், மணிப்பூர் 2.27 லட்சம், ஜார்க்கண்ட் 2.2 லட்சம், மகாராஷ்டிரா 1.89 லட்சம் என்ற பங்கினைக் கொண்டுள்ளன.