TNPSC Thervupettagam
August 4 , 2024 114 days 212 0
  • பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவானது (CCEA), உயிர் உரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் பூமியை நன்கு மீட்டெடுத்து மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட PM-PRANAM திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • PM-PRANAM என்பது பிரதம மந்திரியின் புவி மறுசீரமைப்பு, விழிப்புணர்வு உருவாக்கம், ஊட்டமளிப்பு மற்றும் மேம்படுத்துவதற்கான திட்டம் என்பதைக் குறிக்கிறது.
  • உரங்களை நிலையான மற்றும் சீரான முறையில் பயன்படுத்துவதை ஊக்குவித்தல், மாற்று உரங்களை ஏற்றுக் கொள்வது, கரிம வகை மற்றும் இயற்கை முறையில் வேளாண்மையினை ஊக்குவித்தல் போன்றவற்றின் மூலம் புவியின் ஆரோக்கியத்தை காக்க மாநிலங்கள் / ஒன்றியப் பிரதேசங்களால் தொடங்கப் பட்ட பல  முயற்சிகளை நிறைவு செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • அனைத்து மாநிலங்களும் / ஒன்றியப் பிரதேசங்களும் PM - PRANAM திட்டத்தின் கீழ் அடங்கும்.
  • இந்தத் திட்டத்தின் கீழ், முந்தைய 3 ஆண்டுகளின் சராசரி நுகர்வுடன் ஒப்பிடும்போது, ​​இரசாயன உரங்களின் நுகர்வு ஆனது (யூரியா, DAP, NPK, MOP) குறைக்கப் படுவதன் மூலம் ஒரு குறிப்பிட்ட நிதியாண்டில் ஒரு மாநிலம் / ஒன்றியப் பிரதேசத்தினால் சேமிக்கப்படும் உர மானியத்தில் சுமார் 50 சதவீமானது மானியமாக அந்த மாநிலம் / ஒன்றியப் பிரதேசத்திற்கு அனுப்பப்படும்.
  • மாநிலங்கள் / ஒன்றியப் பிரதேசங்கள் இந்த மானியத்தை அங்குள்ள விவசாயிகள் உட்பட மாநிலத்தில் உள்ள மக்களின் நலனுக்காகப் பயன்படுத்தலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்