TNPSC Thervupettagam

PM-PVTG மேம்பாட்டுத் திட்டம்

November 18 , 2023 246 days 221 0
  • இது பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரரான பிர்சா முண்டா அவர்களின் பிறந்த நாளான நவம்பர் 15 ஆம் தேதியன்று தொடங்கப்பட்டது.
  • இந்தத் திட்டம் ஆனது எளிதில் பாதிக்கப்படக் கூடிய பழங்குடியினக் குழுக்களைச் சேர்ந்த சுமார் 28 லட்சம் மக்களின் ஒட்டு மொத்த மேம்பாட்டிற்காக வடிவமைக்கப் பட்டுள்ளது.
  • தொலைதூர கிராமங்களில் வசிக்கும் 75 எளிதில் பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினக் குழுக்களைச் சேர்ந்த சமூகத்தினருக்கு மின்சாரம், நீர், சாலை இணைப்பு, வீட்டுவசதி, கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற முக்கிய உள்கட்டமைப்பைக் கொண்டு சேர்ப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • எளிதில் பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினக் குழுக்கள் சுமார் 18 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் உள்ள 22,000 தொலைதூர கிராமங்களில் வாழ்கின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்