தமிழகத்தில் PM SHRI என்ற திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக மத்தியக் கல்வித் துறை அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
பிரதான் மந்திரி - எழுச்சிபெறும் இந்தியாவிற்கான பள்ளிகள் (PM SHRI) திட்டம் என்பது ஒரு மத்திய அரசின் நிதியுதவி பெறும் திட்டமாகும்.
இது 2020 ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கையின் அமலாக்கத்தைக் காட்சிப் படுத்துவதையும், ஒரு குறிப்பிட்ட காலக் கட்டத்தில் ஒரு முன்மாதிரியான பள்ளியாக உருவெடுப்பதையும் மற்றும் அவற்றின் அருகிலுள்ள மற்றப் பள்ளிகளுக்கு ஒரு வழிகாட்டுதலை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
PM SHRI பள்ளிகள் ஆனது மாணவர்களின் அறிவாற்றல் வளர்ச்சிக்குத் தரமான ஒரு கற்பித்தலை வழங்கும்.
21 ஆம் நூற்றாண்டின் முக்கியத் திறன்களைக் கொண்ட முழுமையான மற்றும் நல்ல மேம்பட்ட நபர்களை உருவாக்குவதற்கும் மேம்படுத்துவதற்கும் இது பணியாற்றும்.