‘பிரதான் மந்திரி சமாஜிக் உத்தன் மற்றும் ரோஸ்கர் ஆதாரித் ஜன்கல்யான்’ (PM-SURAJ) என்ற தேசிய இணைய தளம் ஆனது சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த இணைய தளமானது, சமூகத்தின் விளிம்பு நிலைப் பிரிவினருக்கு கடன் உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதைப் பயன்படுத்தி, சமூகத்தின் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவர்கள் கடன் திட்டத்தின் கீழ் கடன் பெற விண்ணப்பிக்கவும், தாங்கள் ஏற்கனவே பெற்றுள்ள அனைத்து கடன்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கவும் இயலும்.