PM-SYM திட்டத்தின் செயல்பாட்டு திறன்
July 18 , 2023
371 days
208
- அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் ஓய்வூதியத் திட்டத்திலிருந்து ஆறு மாதங்களுக்குள் கிட்டத்தட்ட 21 சதவீத சந்தாதாரர்கள் வெளியேறியுள்ளனர்.
- இந்த ஓய்வூதியத் திட்டமானது பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மன்-தன் (PM-SYM) என அழைக்கப்படுகிறது.
- ஜூலை 11 ஆம் தேதி அன்றைய நிலவரப்படி, இந்தத் திட்டத்தின் மொத்தச் சந்தா தாரர்களின் எண்ணிக்கையானது 4.43 மில்லியனாகக் குறைந்துள்ளது.
- இது ஜனவரி 31 ஆம் தேதியன்று இருந்த வரலாறு காணாத அளவான 5.62 மில்லியனை விட 1.19 மில்லியன் குறைவாகும்.
- PM-SYM என்பது ஒரு தன்னார்வப் பங்களிப்பு சார்ந்த ஓய்வூதியத் திட்டமாகும்.
- இது மில்லியன் கணக்கான அமைப்புசாராத் தொழிலாளர்களைச் சமூகப் பாதுகாப்பு வலையமைப்பிற்குள் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டது.
- இந்தத் திட்டத்தின் மூலம் 18 முதல் 40 வயதுக்குட்பட்ட, மாதம் 15,000 ரூபாய்க்கும் குறைவாக ஊதியம் பெறுகின்ற அமைப்புசாரா தொழிலாளர்கள் பயன் பெற இயலும்.
Post Views:
208