TNPSC Thervupettagam

PM-SYM திட்டத்தின் செயல்பாட்டு திறன்

July 18 , 2023 371 days 207 0
  • அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் ஓய்வூதியத் திட்டத்திலிருந்து ஆறு மாதங்களுக்குள் கிட்டத்தட்ட 21 சதவீத சந்தாதாரர்கள் வெளியேறியுள்ளனர்.
  • இந்த ஓய்வூதியத் திட்டமானது பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மன்-தன் (PM-SYM) என அழைக்கப்படுகிறது.
  • ஜூலை 11 ஆம் தேதி அன்றைய நிலவரப்படி, இந்தத் திட்டத்தின் மொத்தச் சந்தா தாரர்களின் எண்ணிக்கையானது 4.43 மில்லியனாகக் குறைந்துள்ளது.
  • இது ஜனவரி 31 ஆம் தேதியன்று இருந்த வரலாறு காணாத அளவான 5.62 மில்லியனை விட 1.19 மில்லியன் குறைவாகும்.
  • PM-SYM என்பது ஒரு தன்னார்வப் பங்களிப்பு சார்ந்த ஓய்வூதியத் திட்டமாகும்.
  • இது மில்லியன் கணக்கான அமைப்புசாராத் தொழிலாளர்களைச் சமூகப் பாதுகாப்பு வலையமைப்பிற்குள் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டது.
  • இந்தத் திட்டத்தின் மூலம் 18 முதல் 40 வயதுக்குட்பட்ட, மாதம் 15,000 ரூபாய்க்கும் குறைவாக ஊதியம் பெறுகின்ற அமைப்புசாரா தொழிலாளர்கள் பயன் பெற இயலும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்