பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையானது பொது மக்களுக்கான வை-பை (அருகலை – வைபை) சேவைகளை வலுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் பொது வை-பை அமைப்புகளை அமைப்பதற்கு ஒப்புதல் அளித்து உள்ளது.
இந்தப் பொது அருகலை அணுகல் அமைப்பு இடைமுகமானது பிரதான் மந்திரி – WANI என்றறியப் பட்டு, இந்திய அரசினால் அமைக்கப்பட உள்ளது.
PM-WANI ஆனது நாட்டில் அருகலை அமைப்புகளின் வளர்ச்சியை ஊக்கப்படுத்த உள்ளது.
இது பொதுத் தகவல் அலுவலக மாதிரியைப் போன்றதாகும்.
பொது அருகலைச் சேவையானது பொதுத் தரவு அலுவலத்தின் மூலம் வழங்கப் படுகின்றது.
தேசிய டிஜிட்டல் தகவல் தொடர்புக் கொள்கை, 2018 என்ற கொள்கையானது 2020 ஆம் ஆண்டில் இணைய வசதியானது 5 மில்லியன் மக்களை எட்டுவதையும் 2022 ஆம் ஆண்டில் 10 மில்லியன் மக்களை எட்டுவதையும் இலக்காக நிர்ணயித்துள்ளது.