2023 ஆம் ஆண்டில் PM YASASVI திட்டத்தின் கீழ் மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்களுக்கு மேல்நிலைக் கல்வி உதவித் தொகைக்காக மொத்தம் 32.44 கோடி ரூபாயும், உயர் கல்வி உதவித் தொகைக்காக 387.27 கோடி ரூபாயும் வழங்கப் பட்டு உள்ளது.
இது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBCs), பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் (EBC) மற்றும் சீர் மரபின நாடோடிப் பழங்குடியினர் (DNT) மாணவர்களுக்கான உதவித் தொகை திட்டமாகும்.
இத்திட்டத்தின் கீழ் மாணவர் கள் 9 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் மேல்நிலைக் கல்வி உதவித்தொகையையும், மெட்ரிகுலேஷன் அல்லது மேல்நிலைக் கல்விக்குப் பிந்தைய உயர்கல்வி பயிலும் மாணவர்கள் போஸ்ட் மெட்ரிக் உதவித் தொகையையும் பெறலாம்.
கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்கள் உயர்தரப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிப்பதற்கான உதவித் தொகை வாய்ப்பைப் பெறுவர்.