சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் ஆனது, துடிப்புமிக்க இந்தியாவினை உருவாக்குவதற்கான (PM-YASASVI) பிரதான் மந்திரி இளம் சாதனையாளர்கள் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
இந்த விரிவான முதன்மைத் திட்டம் ஆனது, இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC), பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினர் (EBC) மற்றும் சீர் மரபினர் (DNT) சமூக மாணவர்களுக்கு, அவர்களின் ஆரம்பக் கட்ட வளர்ச்சி ஆண்டுகளில் மிகவும் தரமான கல்விக்கான அணுகலை வழங்கி அவர்களை மேம்படுத்தச் செய்வதை நோக்கமாகக் கொண்டது.
EBC பிரிவினர்களுக்கான பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிறகான டாக்டர் அம்பேத்கர் ஊக்கத் தொகை திட்டம் மற்றும் DNTபிரிவினர்களுக்கான டாக்டர் அம்பேத்கர் பத்தாம் வகுப்புத் தேர்ச்சிக்கு முந்தைய மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிறகான ஊக்கத் தொகை திட்டம் உட்பட முன்னதாக மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்புகளை இந்த திட்டம் ஒருங்கிணைத்து மேம்படுத்துகிறது.
இந்தத் திட்டங்களை ஒருங்கிணைப்பதன் மூலம், சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய மாணவர்களின் கல்வித் தேவைகளை ஆதரிப்பதில் மிகவும் நெறிப்படுத்தப்பட்ட மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய அணுகுமுறையை இது உறுதி செய்கிறது.