மூன்றாவது இளம் எழுத்தாளர்களுக்கு வழிகாட்டுவதற்கான பிரதமரின் திட்டத்தினை (PM-YUVA 3.0) கல்வி அமைச்சகம் தொடங்கியுள்ளது.
இந்தியாவில் வாசிப்பு, எழுத்து மற்றும் புத்தகக் கலாச்சாரத்தினை ஊக்குவிப்பதற்கு 30 வயதிற்குட்பட்ட இளம் எழுத்தாளர்களுக்குப் பயிற்சி அளிப்பதே இந்த மிகப்பெரும் முன்னெடுப்பின் நோக்கமாகும்.
இந்தத் திட்டமானது, இந்திய இலக்கியத்தினை உலகளாவியத் தளத்தில் பெருமளவு மேம்படுத்துவதற்கான வழிகாட்டுதல் மற்றும் வெளியீட்டு வாய்ப்புகளை வழங்கச் செய்கிறது.
PM-YUVA 3.0 ஆனது, அதன் முந்தையத் திட்டங்களில் 22 இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில் இளம் எழுத்தாளர்களின் பங்கேற்பை அடிப்படையாகக் கொண்டது.