ஆண்டிற்கு சுமார் 22 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்குப் பயனளிப்பதை நோக்கமாகக் கொண்ட பிரதமர்-வித்யாலட்சுமி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தத் திட்டம் ஆனது, “நிதிக் கட்டுப்பாடுகள் ஆனது எந்தவொரு மாணவரையும் உயர் கல்வியைத் தொடர்வதைத் தடுக்கக் கூடாது என்பதற்காகத் தகுதியுள்ள அனைத்தும் மாணவர்களுக்கு நிதியுதவி அளிக்க உள்ளது”.
சுமார் 7.5 லட்சம் ரூபாய் வரையிலான கடனைப் பெற முயலும் மாணவர்களுக்கு, நிலுவையில் உள்ள 75 சதவீத கடனுக்கான உத்தரவாதத்தை அரசாங்கம் வழங்கும்.
ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாய் வரையில் உள்ள பொருளாதாரத்தில் நலிவடைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் சுமார் 10 லட்சம் ரூபாய் வரையிலான கடனுக்கு மூன்று சதவீத வட்டி மானியம் பெற உரிமை வழங்கப்படும்.
அமைச்சகத்தின் உயர்கல்வித் துறையானது, PM-வித்யாலட்சுமி என்ற ஒருங்கிணைந்த இணைய தளத்தினை அமைக்க உள்ளது.
இதன் மூலம் மாணவர்கள் கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம் மற்றும் அனைத்து வங்கிகளிலும் வட்டி மானியம் பெறலாம்.