ஊரக மேம்பாட்டு அமைச்சகம் ஆனது 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-கிராமின் (PMAY-G) திட்டத்தின் கீழ் 10 லட்சம் வீடுகள் கட்டுவதற்கான இலக்கினை நிர்ணயித்துள்ளது.
PMAY-G திட்டம் ஆனது, 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், 2029 ஆம் ஆண்டிற்குள் கூடுதலாக இரண்டு கோடி வீடுகளை கட்டமைப்பதை நோக்கமாகக் கொண்டு மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது.
இதில் மிக அதிக எண்ணிக்கையிலான குடும்பங்களைப் பயனாளிகளாகச் சேர்த்து, அனைவருக்கும் வீடு என்ற இலக்கை முன்னெடுத்துச் செல்லும் வகையில், இந்தத் திட்டத்தின் தகுதி விதிகள் திருத்தப்பட்டுள்ளன.
2024-25 ஆம் நிதியாண்டில் வீட்டு வசதித் திட்டத்திற்கு, 54,500 கோடி ரூபாய் என்ற அதிக அளவிலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.