1 கோடி வீடுகளைக் கட்டமைக்கும் நோக்கில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-நகர்ப்புற (PMAY-U) 2.0 திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் நகர்ப்புற ஏழைக் குடும்பங்களுக்கு நியாயமான விலையில் நகர்ப்புற வீடுகளைக் கட்டுவதற்கு, வாங்குவதற்கு அல்லது வாடகைக்கு எடுப்பதற்கு நிதி உதவி வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் பயன்களைப் பெறுவதற்குத் தகுதியான வருமான அளவுருக்கள் பின்வருமாறு:
3 லட்சம் ரூபாய் வரையிலான ஆண்டு வருமானம் உள்ள பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பங்கள்.
3 முதல் 6 லட்சம் ரூபாய் வரையிலான ஆண்டு வருமானம் உள்ள குறைவான வருமானம் கொண்ட குடும்பங்கள்.
6 முதல் 9 லட்சம் ரூபாய்க்கு இடைப்பட்ட ஆண்டு வருமானம் கொண்ட நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்கள்.