TNPSC Thervupettagam
August 18 , 2024 100 days 168 0
  • 1 கோடி வீடுகளைக் கட்டமைக்கும் நோக்கில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-நகர்ப்புற (PMAY-U) 2.0 திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் நகர்ப்புற ஏழைக் குடும்பங்களுக்கு நியாயமான விலையில் நகர்ப்புற வீடுகளைக் கட்டுவதற்கு, வாங்குவதற்கு அல்லது வாடகைக்கு எடுப்பதற்கு நிதி உதவி வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் திட்டத்தின் பயன்களைப் பெறுவதற்குத் தகுதியான வருமான அளவுருக்கள் பின்வருமாறு:
    • 3 லட்சம் ரூபாய் வரையிலான ஆண்டு வருமானம் உள்ள பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பங்கள்.
    • 3 முதல் 6 லட்சம் ரூபாய் வரையிலான ஆண்டு வருமானம் உள்ள குறைவான வருமானம் கொண்ட குடும்பங்கள்.
    • 6 முதல் 9 லட்சம் ரூபாய்க்கு இடைப்பட்ட ஆண்டு வருமானம் கொண்ட நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்