TNPSC Thervupettagam

PMEGP - கிராமப்புற வேலைவாய்ப்பு உருவாக்கம்

January 15 , 2025 2 hrs 0 min 11 0
  • பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டத்தின் (PMEGP) கீழ் ஆதரிக்கப்படும் கிராமப் புற நிறுவனங்கள், வேலைவாய்ப்பை உருவாக்குவதில் தங்கள் நகர்ப்புற சக நிறுவனங்களை விட சிறப்பாக செயல்பட்டுள்ளன.
  • இந்தியா முழுவதும் கிராமப்புறங்களில் நிறுவப்பட்ட நுண்/குறு நிறுவனங்கள் ஒரு நிறுவனத்திற்கு 8.19 வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன.
  • இது நகர்ப்புற நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனத்திற்கு 8.07 வேலை வாய்ப்புகள் என்ற அளவினை விட அதிகமாகும்.
  • இந்த காலக்கட்டத்தில் PMEGP திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மொத்த 80.52 லட்சம் மதிப்பிடப்பட்ட வேலைவாய்ப்புகளில், சுமார் 64.55 லட்சம் வேலைவாய்ப்புகள் கிராமப் புறங்களில் உருவாக்கப்பட்டன.
  • உதவி வழங்கப்பட்ட மொத்த 9.86 லட்சம் நிறுவனங்களில், சுமார் 79.89 சதவீதம் மட்டும் கிராமப் புறங்களில் அமைந்திருந்த அதே நேரத்தில் 20.11 சதவீதம் மட்டுமே நகர்ப் புறங்களில் அமைந்திருந்தன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்