பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா திட்டம் மற்றும் மறுசீரமைக்கப்பட்ட வானிலை அடிப்படையிலான பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தினை 2025-26 ஆம் ஆண்டு வரையில் தொடர்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு 2025-26 ஆம் ஆண்டு வரையில், சில தடுக்க முடியாத இயற்கைப் பேரழிவுகளிலிருந்து பயிர்களைப் பாதுகாக்க இது உதவும்.
824.77 கோடி ரூபாய் நிதியுடன் புதுமை மற்றும் தொழில்நுட்பத்திற்கான நிதியை (FIAT) உருவாக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
YES-TECH, WINDS போன்ற சில திட்டங்களின் கீழ், தொழில்நுட்ப முன்னெடுப்புகளுக்கு நிதி அளிப்பதற்காக இந்த நிதிப் பயன்படுத்தப்படும்.