அனைத்து டிஜிட்டல் கிராமங்களின் மீதான 100% டிஜிட்டல் கல்வியறிவிற்காக வேண்டி PMGDISHA திட்டத்தின் கீழ் பிரதான் மந்திரி கிராமின் டிஜிட்டல் சக்சார்த்தா அபியான் (Pradhan Mantri Gramin Digital Saksharta Abhiyan) என்ற இயக்கமானது தொடங்கப் பட்டுள்ளது.
இது கிராமப்புறப் பகுதிகளுக்காக அரசினால் தொடங்கப்பட்ட ஒரு முதன்மையான டிஜிட்டல் கல்வியறிவு திட்டமாகும்.
இது 2020 ஆம் ஆண்டில் கிராமப்புறப் பகுதிகளிலுள்ள 6 கோடி நபர்களை டிஜிட்டல் கல்வியறிவைப் பெறச் செய்கிறது.
டிஜிட்டல் கல்வியறிவினைப் பெறாத ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒரு நபருக்கு டிஜிட்டல் கல்வியறிவினை இது வழங்க உள்ளது.
இந்த இயக்கத்தின் கீழ், கிராமப்புற மக்களுக்கு குறிப்பாக பெண்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மூன்று நாள் அளவிலான ஒரு சான்றிதழ் பயிற்சி இயக்கம் நடத்தப் படும்.
அனைத்து டிஜிட்டல் கிராமங்களையும் 100% டிஜிட்டல் கல்வியறிவு பெற்றதாக மாற்றும் வகையில் பொதுச் சேவை மையங்களும் நிறுவப்படும்.