TNPSC Thervupettagam
September 16 , 2021 1167 days 960 0
  • அனைத்து டிஜிட்டல் கிராமங்களின் மீதான 100% டிஜிட்டல் கல்வியறிவிற்காக வேண்டி PMGDISHA திட்டத்தின் கீழ் பிரதான் மந்திரி கிராமின் டிஜிட்டல் சக்சார்த்தா அபியான் (Pradhan Mantri Gramin Digital Saksharta Abhiyan) என்ற இயக்கமானது தொடங்கப் பட்டுள்ளது.
  • இது கிராமப்புறப் பகுதிகளுக்காக அரசினால் தொடங்கப்பட்ட ஒரு முதன்மையான டிஜிட்டல் கல்வியறிவு திட்டமாகும்.
  • இது 2020 ஆம் ஆண்டில் கிராமப்புறப் பகுதிகளிலுள்ள 6 கோடி நபர்களை டிஜிட்டல் கல்வியறிவைப் பெறச் செய்கிறது.
  • டிஜிட்டல் கல்வியறிவினைப் பெறாத ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒரு நபருக்கு டிஜிட்டல் கல்வியறிவினை இது வழங்க உள்ளது.
  • இந்த இயக்கத்தின் கீழ், கிராமப்புற மக்களுக்கு குறிப்பாக பெண்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மூன்று நாள் அளவிலான ஒரு சான்றிதழ் பயிற்சி இயக்கம்  நடத்தப் படும்.
  • அனைத்து டிஜிட்டல் கிராமங்களையும் 100% டிஜிட்டல் கல்வியறிவு பெற்றதாக மாற்றும் வகையில் பொதுச் சேவை மையங்களும் நிறுவப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்