TNPSC Thervupettagam

PMGKAY திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

December 4 , 2023 230 days 200 0
  • பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் 2028 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு 81 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
  • இத்திட்டத்திற்கான இலக்காக நிர்ணயிக்கப்பட்ட மக்களுக்கு உணவு தானியங்களின் அணுகல், அவற்றின் மலிவான விலை மற்றும் அவை சுலபமாக கிடைக்கப் பெற செய்தல் ஆகியவற்றினை உறுதி செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • PMGKAY திட்டமானது, பெருந்தொற்றினால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்வதற்காக  முதலில் 2020 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
  • இந்தத் திட்டத்தின் கீழ், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) கீழ் மானிய விலையில் வழங்கப்படும் உணவு தானியத்துடன் சேர்த்து, ஒரு பயனாளிக்கு மாதம் 5 கிலோ இலவச உணவு தானியங்களை வழங்கப்படுகிறது.
  • 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி, PMGKAY திட்டமானது தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டு, ஒரு வருடத்திற்கு இலவச ரேஷன் பொருட்களை வழங்குகிறது.
  • PMGKAY திட்டத்தின் கீழ் அந்தியோதயா குடும்பங்களுக்கு 35 கிலோ அரிசி மற்றும் கோதுமை வழங்குவதற்கான பொருளாதாரச் செலவை மத்திய அரசே ஏற்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்