ஆயுஷ்மான் பாரத்-பிரதம மந்திரி ஜன் ஆரோக்கியா திட்டத்தின் (Ayushman Bharat –Pradhan Mantri Jan Arogya Yojana- AB – PMJAY) கீழ் நிதிக் கோரிக்கை கோரப்பட்ட தொகையில் தமிழ்நாடானது இரண்டாம் இடத்தில் உள்ளது.
ஏறக்குறைய 641 கோடி ரூபாய்க்கான கோரிக்கையுடன் குஜராத் மாநிலம் பட்டியலின் முதலிடத்திலும் 399 கோடி ரூபாய்க்கான கோரிக்கையுடன் தமிழ்நாடு இரண்டாம் இடத்திலும் உள்ளது.
AB – PMJAY என்பது மத்திய அரசின் முதன்மை சுகாதாரத் திட்டமாகும்.
ஒட்டுமொத்த கோரிக்கைகளின் எண்ணிக்கை அடிப்படையில் தமிழ்நாடு நான்காவது இடத்தில் உள்ளது.